சற்று முன் 12 பேரூந்துகளில் வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்

சற்று முன் 12 பேரூந்துகளில் வடக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்த நிலையில் அவர்களில் ஒரு பகுதியினர் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த நபர்கள் இன்று (08.10.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா ஊடாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு பேரூந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த கொரோனா தொற்று சந்தேகநபர்கள் 12 பேரூந்துகளில் இராணுவ பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like