கொரோனா இருப்பது தெரியாமல் கொழும்பு முழுவதையும் சுற்றி வந்த நபர்

கொரோனா இருப்பது தெரியாமல் கொழும்பு முழுவதையும் சுற்றி வந்த நபர்

நாளைய தினம் (10) இந்தியாவுக்குச் செல்லவிருந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோதடுவ மருத்துவ அலுவலகத்தின் நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் நலின் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளார்.

இதேவேளை இவரது குழந்தை கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சுமார் ஐந்து மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவரது மனைவியும் குழந்தையுடனேயே வைத்தியசாலையில் இருந்துள்ளார்.

இவர் குழந்தை மற்றும் மனைவியை பார்ப்பதற்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.

இவரது குழந்தைக்கும் மனைவிக்கும் கொரோனா ஏற்படவில்லை என்று உறுதியாகி உள்ளது. ஆனால் வைத்தியசாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இவர் நாளைய தினம் இந்தியாவுக்கு செல்ல வேண்டி இருப்பதால் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நாரஹென்பிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவற்றுக்கு சென்றுள்ளனர்.

மேலும் அடிக்கடி பெட்டா மற்றும் கோட்டைக்குச் சென்று வெளிநாடுகளுக்குச் செல்ல பொருட்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளை வாங்கியதாக சுகாதார அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like