வவுனியாவில் பிறந்த நாள் நிகழ்வில் சென்ற இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்!

வவுனியாவில் பிறந்த நாள் நிகழ்வில் சென்ற இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்!

புங்குடுதீவு பெண் கலந்துகொண்ட பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இரு குடும்பங்கள் வவுனியா பூந்தோட்டம் சிறிநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண் புங்குடுதீவில் பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட வவுனியாவை சேர்ந்த இரண்டு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரால் இன்றைய தினம் காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You might also like