கொரோனா தொற்றும் ஆபத்து! கம்பஹா, கொழும்பிலிருந்து தொடங்கி நாடு முழுவதும் அமுலுக்கு வரும் நடைமுறை

நோயாளிகளின் கிரமமான பரிசோதனையால் (கிளினிக்) ஏற்படும் நெரிசல் காரணமாக கொரோனா தொற்றுவதற்கான ஆ பத்துக்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாட்பட்ட நோயில் பா திக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் மருத்துவமனை கிரம பரிசோதனைகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அரசு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளுக்கு மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது செய்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் தொடங்கி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like