திருமணத்திற்கு முன்னர் 3 மனைவிகள் : உண்மையை கண்டுபிடித்த 4 வது மனைவி

தமிழகத்தில்

தமிழகத்தில், நகை பணத்திற்கு ஆசைப்பட்டு நான்கு பெண்களை திருமணம் செய்த பொலிஸார் ஒருவரின் மகன் காவல்துறையில் சி க்கியிருப்பது பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். திருச்சி ஆ யுதப்ப டையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற 26 வயது மகன் உள்ளார்.

கார்த்திக் தனியார் எலக்ட்ரானிக் கடை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு சுமதி(20) என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதி திருவெறும்பூர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர். அப்போது திருமணத்திற்காக பெண் வீட்டிலிருந்து போட்ட 16 பவுன் நகையை கார்த்திக் விற்று செலவு செய்துள்ளார்.

அதுமட்டுமன்றி, சுமதி கருவுற்றபோது கருவினை கலைக்க கார்த்திக் வ ற்புறுத்தி யுள்ளார். இதே போன்று மூன்று முறை சுமதி கருவை கலைக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து கணவனின் நடத்தையில் ச ந்தேகமடைந்த சுமதி, கார்த்திக்கின் கைப்பேசியை ஆராய்ந்தபோது, கார்த்திக் மேலும் சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்து ள்ளார்.

இது குறித்து கார்த்திக்கிடம் சுமதி கேட்ட போது, மேலும் 3 பெண்களுடன் திருமணம் நடந்த விஷயம் வெளியே வந்துள்ளது. 6 வருடங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணுடன், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். அதன்பின்னர் நண்பர்களுடன் இணைந்து சென்று பெண் கேட்டு 3 பெண்களை அடுத்தடுத்து கார்த்திக் திருமணம் செய்திருக்கிறார் என்கிறார் என்ற தி டுக்கி டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவதாக, சென்னையை சேர்ந்த வாணி, 3-வதாக மீனா ஆகியோரை மணந்துள்ளார். வாணிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது . இந்த விஷயங்கள் தெரிந்ததும் சுமதியும், அவரது பெற்றோரும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

வழக்கை விசாரித்த பொலிசார், கார்த்திக்கை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி றையில் அடைத்தனர். ஏற்கனவே திருமணமான 3 பெண்களும் கார்த்திக்குடன் தொடர்பில் இல்லை. அவர்கள் கார்த்திக் மீது புகாரும் தரவில்லை. இப்போது சுமதி மட்டும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நகை, பணத்திற்காக இந்த நான்கு பெண்களையும் கார்த்திக் திருமணம் செய்து சீ ரழித்துள்ளதாக தெரியவந்துள்ளது, இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே அனைத்து உண்மையும் தெரியவரும்.

You might also like