அரச, தனியார் ஊழியர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு பொலிஸார் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை சேகரித்து பதிவு செய்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாட்டில் கொரோனா அ ச்சுறுத்தல் தீ விரம் அடைந்துள்ள நிலையில், அவசர தேவைகளை கருத்திற் கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

You might also like