மீன் வியாபாரிக்கு கொரோனா – அவர் சென்ற இடங்கள் தொடர்பான தகவல்

இலங்கையில்

கிரிந்திவல – குட்டிகல பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மீன் வியாபாரியுடன் பழகியவர்கள் என கருதப்படும் சுமார் 80 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தொம்பே பொது சுகாதார பரிசோதகர் டப்ளியூ.ஏ. பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மீன் வியாபாரி குட்டிகல, ரந்தவான, மெத்தேகம, போகாகும்புர, கிரிந்திவல, பெப்பில்வெல ஆகிய பிரதேசங்களுக்கு சென்று மீன் வியாபாரம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You might also like