வேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்

நாட்டில் கொர்ரொனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் தென் பகுதிகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வட பகுதிக்கு வருகை தருவோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அ ச்சம் காரணமாக கம்பஹா மாவட்டம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகளும் கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் எ ச்சரிக்கையாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு வருகை தருவோர் தொடர்பான தகவல்களை 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like