கிளிநொச்சியில்அரசு பதில் கூறும்வரை உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் தொடரும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் தொடர் அறவழிப் போராட்டம் தீர்வின்றி இன்றைய தினமும் தொடர்கின்றது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 49ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி போராட்டம் தொடரும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

அவ்வாறே வவுனியாவில் 45 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 33 ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் 26ஆவது நாளாகவும், திருகோணமலையில் 36ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like