பயங்கரவாத அச்சுறுத்தல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள முப்படையினர்

சர்வதேச பயங்கரவாத அமைப்பு என கூறப்படுகின்ற அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் சில வந்துள்ளதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவிற்கும் மற்றும் பல பாதுகாப்பு பிரிவுகளுக்கும் சர்வதேச பயங்கரவாத அமைப்பு என கூறப்படுகின்ற அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டோர்கள் குறித்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குள் பிரவேசிக்கின்றவர்கள், மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறுகின்ற சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையோரை பாதுகாப்பு பிரிவினர் கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

You might also like