இந்தப் புத்தாண்டிலும் எனது பிள்ளை வீடு வர மாட்டானா? கிளிநொச்சியில் கதறியழும் தாய்

“பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளையுடன் சேர்ந்து இந்தப் புதுவருடத்தினைக் கொண்டாட முடியவில்லையே” என விசாரணைக்கென இராணுவத்திடம் ஒப்படைத்த தனது பிள்ளையை பற்றிய தகவல்கள் எதனையும் இதுவரை அறிந்து கொள்ள முடியாத தாய் துயரத்துடன் கதறியழுதார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் 49வது நாளாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கு கருத்து தெரிவித்தபோது குறித்த தாய் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இங்குள்ள தாய்மார்களின் கண்ணீர் இலங்கை அரசாங்கத்தினைச் சும்மா விடாது. அவர்கள் மட்டும் அங்கே சந்தோசமாக புதுவருடக் கொண்டாட்டங்களில் இருக்கின்றார்கள். நாங்கள் இங்கே இந்த கடும் வெய்யிலில் கஸ்ரங்களை அனுபவிக்கின்றோம். இந்தப் புதுவருடத்திற்குள் எமக்கு அரசாங்கம் எங்கள் பிள்ளைகள் எங்கு இருக்கின்றார்கள் என அறிவிக்கவேண்டும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான விபரங்களை வெளியிடவேண்டும் என கோரி, கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவில் முன்பாக இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like