பூநகரி குடமுருட்டிக் குளத்தின் அணைக்கட்டில் நீர்க்கசிவு
கிளிநொச்சி, பூநகரி குடமுருட்டிக் குளத்தின் அணைக்கட்டின் ஒரு இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து, கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் குழு, குளத்தின் அணைக்கட்டுக்குச் சென்று, நீர்க்கசிவினைத் தடுப்பது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, “குடமுருட்டிக் குளத்தின் அணைக்கட்டு மற்றும் வாய்க்கால் பணிகள் முழுமையாக நிறைவுச் செய்யப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்” என இக்கிராமத்தின் விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருக்கின்றனர்.