வவுனியாவில் 45ஆவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்.

இன்று (09.04.2017)  45ஆவது நாளாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 45ஆவது நாளாக  தொடர்ந்து வருகின்றது.

எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டி நிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like