முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,901 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார்  5,901 குடும்பங்கள், பெண்களை  தலைமைத்துவமாகக் கொண்டவையான காணப்படுவதாக மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர்  பிரிவுகளிலும் மீள்குடியேறியுள்ள சுமார் 42,158 குடும்பங்களில் 5,901 குடும்பங்கள், பெண் தலைமைத்தவம் கொண்டவையாகும்.

கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1,577 குடும்பங்களும் புதுக்குடியிருப்பில் 1,852, ஒட்டுசுட்டானில் 1,055, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில்  636 குடும்பங்கள், மாந்தை கிழக்கு 444, வெலிஓயாவில் 337 குடும்பங்கள் என சுமார் 5,901 குடும்பங்கள் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களாக காணப்படுகின்றன.

இதில் 19 கிராம அலுவலர் பிரிவுகளை கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன.

இவற்றில், 4, 488 குடும்பங்கள் கணவனை இழந்த குடும்பங்களாகவும் ஏனைய குடும்பங்கள் கணவனைப்பிரிந்து வாழும் குடும்பங்களாகவும் காணப்படுவதுட்ன இவற்றில் காணாமல் போனவர்கள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விட மனைவியை இழந்த நிலையில் 236 குடும்பங்களும் காணப்படுகின்றன.

You might also like