கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது,

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அக்கராயன்குளம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் ஆறுமுகம் (வயது- 67) என்பவர் படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பேரூந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே இவ்விபத்திற்கு காரணமென தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்துடன் சம்பந்தப்பட்ட பேருந்து நேற்றை தினமும் பிறிதொரு விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், விபத்து இடம்பெற்ற இடத்தில் கூறி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like