தீர்வுகள் கிடைக்காவிட்டால் எமது முடிவுகள் பாரதூரமாகவே அமையும்: பன்னங்கண்டி மக்கள் எச்சரிக்கை

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 19வது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், தமக்கான தீர்வு கிடைக்காது போனால் பாரதூரமான முடிவுகளை எடுக்கப்போவதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த இம் மக்கள் சுமார் 27 வருடங்களாக பன்னங்கண்டி பிரதேசத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் குறித்த காணிகளுக்குரிய பெறுமதியினை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற வருமாறு அழைத்த அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் போராடி வரும் மக்களுக்கு அரசியல்வாதிகளின் தரப்பிலிருந்தும் எதுவித உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் கூறுகையில், “இப்பகுதியில் நிலவும் காணிக்கான விலையினை நாம் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். இதைக்கூட இந்த அரசாங்கத்தினால் செய்யமுடியவில்லை என்றால் எமக்கு இந்த அரசாங்கமும், அரசியல்வாதிகளும் தேவையில்லை” என கூறினார்.

You might also like