பாழடைந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்
வெலிகந்தை, செவனப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெலிகந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
செவனப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞன் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் குறித்து வெலிகந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.