வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று (11) பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியன் வடக்கு நோக்கி மிக அண்மித்து நகர்வடைவதன் காரணமாக, இம்மாதம் (ஏப்ரல்) 05ம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்.

அந்த வகையில் இன்றைய தினம் (10) புத்தளம் மாவட்டத்தின் கல்லடி, அக்குரணை, கிரித்தலை, கட்டுவன்விலை மற்றும் எலிபன்ட் பொயின்ட் ஆகிய பிரதேசங்களில், நண்பகல் கடந்து, பிற்பகல் 12.12 மணிக்கு சூரியன் அதிக உச்சம் கொடுக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில், நண்பகல் 12.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் வெளியில் செல்வதை தவிர்ப்பது உகந்தது என்பதோடு, சிறுவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் அவதானமாக இருப்பது சிறந்ததாகும்.

You might also like