பிலவுக்குடியிருப்பில் மாணவர்களுக்குக் கூட பஸ் சேவை இல்லை

முல்லைத்தீவு, பிலவுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள மாணவர்களின் நன்மைகருதி, போக்குவரத்துச் சேவையொன்றினை ஏற்படுத்தித்ததருமாறு, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலமீட்புப் போராட்டத்தின் பின்னர், அண்மையில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதியான முல்லைத்தீவு பிலவுக்குடியிருப்புப் பகுதியில், 30க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உள்ளதுடன், குறித்த மாணவர்கள், பிலவுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வற்றாப்பளை மகாவித்தியாலயம், கேப்பாப்புலவு மாதிரிகிராமத்தில் இயங்கி வரும் கேப்பாப்புலவு மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில், இந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள், கடந்த ஒருமாத காலமாக, கால்நடையாகவே நடந்து செல்கின்றனர்.

எனவே, இரண்டாம் தவணைக்காக பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது, போக்குவரத்து ஒழுங்குகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது முன்பள்ளி கல்வியைத் தொடர வேண்டிய 15 வரையான சிறுவர்கள் உள்ளதாகவும், முன்பு இயங்கிய முன்பள்ளியை இயங்கவைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like