வவுனியாவில் ரயில் கடவை காப்பாளர்கள் பணிப்புறக்கணிப்பு : பொலிஸார் கடமையில்

பண்டிகைக் கால முற்கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

எனினும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் கடவை காப்பாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like