நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்: கணவன், மகன் கண்முன்னே தலை துண்டாகி இறந்த பெண்

தமிழகத்தில் ஓடும் ரெயிலில் இளம் பெண் ஒருவர் இறங்க முற்பட்ட போது, எதிர்பாராதவிதமாக சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் நெல்லையைச் சேர்ந்தவர் அரவிந்த் சுப்பிரமணியன், இவர் மனைவி சீதா லட்சுமி, இவர்களுக்கு 12 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

சுப்ரமணியன் தனது உறவினரின் திருமணத்திற்காக, குடும்பத்துடன் நாகர்கோவில் செல்லவிருந்தார்.

இதனால் நெல்லை ரயில் நிலையம் வந்த சுப்பிரமணியன் செங்கோட்டை ரெயிலில் தவறுதலாக ஏறிவிட்டனர்.

இதுதெரிந்த பின்னர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளனர், கடைசியாக இறங்கிய சீதா லட்சுமி எதிர்பாரதவிதமாக சீத நிலை தடுமாறி கிழே விழுந்ததில், ரெயிலின் சக்கரத்திற்குள் சிக்கினார். இதனால் அவர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் அந்த இடத்திலே கதறி அழுதனர், நொடிப்பொழுதில் நடந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

 

You might also like