திருமணமான 9 நாளில் கணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்: மனைவி செய்த கொடூர காரியம்

தமிழகத்தில் திருமணம் முடிந்து 9 நாளே ஆன நிலையில் கணவனை கொலை செய்த மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் அண்மையில் தான் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்து 9 நாட்களே ஆன நிலையில் ரமேஷ் வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், இது தொடர்பாக அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

அதன் பின் பொலிசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் எதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டார் என்பதை பொலிசார் இதுவரை தெரிவிக்கவில்லை.

இருப்பினும் திருமணமாகி 9 நாட்களே ஆன நிலையில் கணவர் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு, மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

You might also like