சற்று முன் கிளிநொச்சியில் மினி சூறாவளி! தூக்கி எறியப்பட்டன கூரைகள்
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இரணைமடு சந்தியை அண்டிய பகுதிகளில் மினி சூறாவளியுடன் கூடிய மழை காரணமாக இரணைமடு சந்தையில் அமைந்திருந்த கடைகள் வியாபார கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டு கடும்சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இதனால் சொத்தழிவுகளை தாம் சந்தித்துள்ளதாக கிளிநொச்சி வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.