கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் சித்திரை கொண்டாட்டம்

கிளிநொச்சி, மகாதேவா ஆச்சிரமத்தில் எதிர் வரும் 15ஆம் திகதியன்று சித்திரைப்புத்தாண்டு நிகழ்வுகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சித்திரை கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், மாலை 5.00 மணிமுதல் ‘குக்கூ’ இசைக்குழுவினரின் இசைநிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வண்ணம் அனைவரையும் விழா குழுவினர் அன்புடன் அழைக்கிறனர்.

You might also like