வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

வவுனியாவில் இன்று (11.04.2017) மாலை 3.30மணிமுதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது

வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

வீசிய கடும் காற்றினால் மக்களின் வேளிகள் சிலவும் சேதமடைந்துள்ளது.

மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் வவுனியா திருநாவற்குளம் மக்களின் வீடுகளுக்கு வெள்ள நீர் உற்புகும் நிலைமை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like