மழை வேண்டி கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தில் குளிர்த்தி அபிஷேகம்

கிளிநொச்சியில் மழை வேண்டி குளிர்த்தி அபிஷேகமும் விசேட வழிபாடும் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக மழை இல்லாத நிலையினால் பல விவசாய நிலங்கள் மற்றும் பல கிராமங்கள் நீர் இன்றி காணப்படுகின்றது. இதனால் வறட்சி நிலை உருவெடுக்க தொடங்கி உள்ளது.

இவ்வாறான நிலை தவிர்க்கப்பட்டு நாட்டில் மழை பொழிந்து செழிப்பான தேசம் உருவாக வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல ஆலயங்களில் மழை வேண்டி யாகபூசை வழிபாடுகளும் அபிஷேசங்களும் நடைபெற்றுள்ளது.

தொடர்ச்சியாக வறட்சி நிலை நீடிப்பதானால் நாட்டில் வர்ணபகவான் மழை பொழிய வேண்டும் என்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் நிர்வாகத்தினால் முருகப்பெருமானுக்கு விசேட பூசை வழிபாடும் குளிர்த்தி அபிஷேகமும் நடத்தினார்கள்.

இந்த வழிபாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயிகள் மற்றும் முருகப்பெருமான் பக்தர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like