கிளிநொச்சியில் சற்றுமுன்னர் வாகன விபத்து : யுவதி ஒருவர் பலி

கிளிநொச்சி சேவயர்கடைச் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரண வீடொன்றிட்கு சென்று திரும்பிய, சிரிய ரக வாகனம் ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கிளிநொச்சி திருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த குறித்த யுவதி, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like