இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்

மின்னேரிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறப்புறுப்பு அவரது கள்ளக் காதலியினாலேயே வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையில் ஈடுபட்டிருந்த 30 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த சோக சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதுடன் தற் சமயம் அவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

30 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹிங்குராஙொட பகுதியில் பெண்ணொருவருடன் கள்ளக் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

இந் நிலையில் அந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அண்மையில் மற்றொரு பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயமானது முதலாவது கள்ளக் காதல் தொடர்பில் இருந்த பெண்ணுக்கு தெரியவரவே அவர் பொலிஸ் உத்தியோகத்தரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.

பிறப்புறுப்பு வெட்டப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் முதலில் ஹிங்குராஙொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

You might also like