தேசிய ரீதியிலான ஒளிப்படப் போட்டியில் கிளிநொச்சி மாணவன் விநாயகமூர்த்தி முகுந்தன் தெரிவு

(young star foundatiom) இளம் நட்சத்திர அறக்கட்டளை ஏற்ப்பாட்டில் நடைபெற்ற தேசிய ரீதியான விருது வழங்கும் விழா- 2017 இன் ஒளிப்படப் போட்டியில் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய பழைய மாணவன் விநாயகமூர்த்தி முகுந்தன் தேசிய ரீதியில் நான்காம் இடத்தினை பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந் நிகழ்வானது கடந்த 09.04.2017ம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தேசிய சகவாழ்வு,கலந்துரையாடல்,அரச கரும மொழி அமைச்சர் மனோகனேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

ஒளிப்படப் போட்டியில் வெற்றியேற்றிய  கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய பழைய மாணவன் விநாயகமூர்த்தி முகுந்தன் அவர்களுக்கு நியுஸ்வன்னி இணையத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

You might also like