இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தில் சுற்றுலாக்களை வரையறுக்காவிடின் கொரோனா தொற்று சடுதியாக அதிகரிக்கக்கூடும் என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரானா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விடுக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்குவிதிகளை உரிய முறையில் பின்பற்றுதல் அவசியம் என சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

உரிய முறையில் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றாவிடின் கொரானா தொற்றின் இரண்டாம் அலை நாடு பூராகவும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் ஓரிரு கொரோனா நோயாளர்கள் நாளாந்தம் பதிவாகுவதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதன்போது தெரிவித்தார்.

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளிலிருந்து வௌி மாவட்டங்களுக்கு சென்றவர்களுடன் பழகியவர்களே புதிய கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், பண்டிகை காலத்தில் சுற்றுலாக்கள் மற்றும் வௌி மாவட்டங்களுக்கான பயணங்களை தவிர்த்தல் அவசியம் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like