எயிட்ஸ் நோய் என தடை போட்ட பாடசாலை! பரீட்சையில் சாதித்து பதிலடி கொடுத்த மாணவி

பாடசாலையில் படிப்பதற்கு தடையேற்படுத்திய மாணவி, தவணை பரீட்சையில் முதலாம் இடத்தை பிடித்து பதிலடி கொடுத்துள்ளார்.

எயிட்ஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகித்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சில பெற்றோரின் அழுத்தம் காரணமாக மாணவி ஒருவருக்கு கல்வியை தொடர அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.

கனேமுல்லேயிலுள்ள பாடசாலையை சேர்ந்த மாணவி இம்முறை தவணை பரீட்டையில் முதலாம் இடத்தை பிடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கனேமுல்ல பகுதியின் ஸ்ரீசுமங்கல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவிக்கு எய்ட்ஸ் தொற்று காணப்படுவதாக தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அந்த பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்களின் பெற்றோர் இந்த மாணவியின் பெற்றோருக்கு கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர்.

எனினும் இவை அனைத்து குறித்தும் கருத்திற் கொள்ளாத 9 வயது மாணவி, இறுதியாக இடம்பெற்ற தவணை பரீட்சையில் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

அவருக்கு எதிராக காணப்பட்ட அனைத்து தடைகளையும் தகர்த்து, கல்வியின் மீது ஆர்வம் செலுத்தியுள்ள இந்த மாணவியை சுதந்திரமான படிப்பதற்கு அனுமதிக்குமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like