யாழில் வாய்த்தர்க்கம் காரணமாக இளைஞர்கள் மீது கோடரி தாக்குதல் : மூவர் வைத்தியசாலையில்

யாழ். கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கோடரி வெட்டாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கோடரி தாக்குதலில் சகோதரர் இருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்ததுடன், அவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சகோதரர்களான 24 வயதுடைய ரவிச்சந்திரன் சுவிதர், 34 வயதுடைய ஜேசுநாதன் மற்றும் மீசாலையை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவருமே காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like