தங்கையை வன்புணர முயற்சித்த சகோதரன் பிணையில் விடுதலை

தனது தங்கையை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனை, ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு பதுளை பதில் நீதவான் ஆனந்த மொரகொட உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த சிறுவன் தொடர்பிலான நன்னடத்தை அறிக்கை வரும்வரை, அச்சிறுவனை, அவரது வீட்டில் தங்கவைக்க வேண்டாம் எனவும், வேறொரு இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் பெற்றோருக்கு பணித்துள்ளார்.

குறித்த சிறுவன் பாலியல் காட்சிகளடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்து பழகி, அதற்கு அடிமையாகி, அதேபோல செய்து பார்ப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் தவறான நோக்கத்தில் சிறுமியை அணுகியதை அறிந்துகொண்ட வீட்டிலுள்ள வயோதிபர், அச்சிறுமியை உடனடியாக காப்பாற்றியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் சிறுவனின் தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர், இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சிறுவனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

இதன் போதே, பதில் நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் இவ்வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

You might also like