பண்டிகை காலத்தில் மானை வேட்டையாடியவர்கள் கைது

பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்காக மான் ஒன்றை வேட்டையாடிய இரண்டு பேரை வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த நபர்களை கண்டி பூஜாப்பிட்டிய பொக்காவெல பஹாலகித்துல பிரதேசத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர்கள் இகிரியவத்தை கனதெனியாவல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபர்களிடம் இருந்து மான் இறைச்சி, குழல் துப்பாக்கி, அதற்கான தோட்டாக்கள் மற்றும் மின் விளக்கு என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

You might also like