எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு மதுபான கடைகளுக்கு பூட்டு

எதிர்வரும் இரண்டு நாட்களும் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக்காக நாளையும், நாளை மறுதினமும் நாடு முழுவதிலும் உள்ள மதுபான கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் இந்த இரண்டு தினங்களிலும் கலால் திணைக்கள அதிகாரிகள் நாடு முழுவதிலும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள உள்ளனர்.

மதுபான கடைகளை திறப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like