கிளிநொச்சி பாலிநகரில் பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு

கிளிநொச்சி-பாலிநகர் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பாலிநகர் கிராமத்தைச் சேர்ந்த விதுசன்(10) என்ற சிறுவனே நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுவன் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து உறவினர் வீட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

இதன்போது, வீதியில் சென்ற பாம்பின் மேல் வீழ்ந்த நிலையில் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

பொதுமக்களினால் மீட்கப்பட்டு சிறுவன் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like