வன்னியில் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருங்கள்!

வன்னியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள்விழிப்பாக இருக்க வேண்டும் என பொது அமைப்புக்கள் மற்றும் மாதர் கிராமஅபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் என்பன தெரிவித்துள்ளன.

வன்னியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெண் தலைமைத்துவகுடும்பங்கள் மற்றும் பின்தங்கிய கிராமங்கள் என்பவற்றில் நிதிநிறுவனங்கள் அதிக கூடிய வட்டிகளில் கடன்களை வழங்கி வருகின்றன.

இதனைவிட சில விற்பனை முகவர்கள் உத்தரவாதமற்ற போலியானவீட்டுப் பாவனைப் பொருட்களை கடன்களில் வழங்கி விட்டு அதற்கான பணத்தினை அறவிட்டுவருகின்றனர்.

இதனைவிடதொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி சில முகவர்கள், வறிய மக்களிடம்பணத்தனை வசூலித்து வருகின்றமை அதிகளவில் கானப்படுக்ன்றன.

இவ்வாறான நிதி நடவடிக்கைகளால் பின் தங்கிய கிராமங்களில் வாழும் குடும்பங்கள்மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட மேற்படி அமைப்புக்கள் குறிப்பாக அதிகூடியவட்டிக்கு கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்கள் அதிகளவான கடன்களை பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு வழங்கிவிட்டுஅதிகூடிய வட்டியுடன் அறவிட்டு வருகின்றன.

நிதி நடவடிக்கைகள் தொடர்பில் பூரண அறிவின்மையாலும் உடனடித் தேவைக்கானபணத்தினை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் இவ்வாறு கடன்களைப் பெற்றுக்கொள்ளும்குறித்த குடும்பங்கள் அதனைச் செலுத்த முடியாமல் பெரும் துன்பங்களை அனுபவித்துவருகின்றன.

இதனைவிட கடன்களைச் செலுத்த முடியாது தங்களைத் தாங்களே மாய்த்து தற்கொலைசெய்து கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது.

எனவே இவ்விடயம் தொடர்பில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும்வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் வழிப்பாக இருக்க வேண்டும் எனவும்தங்களது தேவைகள் கருதி பணத்தினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு கிராமிய வங்கிகள், சமுர்த்தி வங்கிகள், அரச தனியார் வங்கிகள் என்பவற்றை அணுகி உரிய நோக்கத்திற்கானகடன்களை குறைந்த வட்டிகளில் பெற்றுக்கொள்ள முடியும் என மாவட்டத்தில் செயற்படும்பொது அமைப்புக்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் என்பனதெரிவித்துள்ளன.

இலங்கையில் உள்ள வங்கிகளுடாகவே உரிய தேவைக்கான கடன்களை பெற்றுக்கொள்ளுமாறும்தவறான வழிகளில் கடன்களை பெறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் இலங்கை மத்தியவங்கியின் வறுமை கடன் ஒழிப்புத் திட்டத்தின் குழுத் தலைவரும் கடன் ஆலோசகருமானசிறிபத்மநாதன் அவர்கள் அண்மையில் வவுனியா மக்கள் வங்கிக் கிளையில் நடைபெற்றவிழிப்புணர்வு கருத்தரங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதுதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது வடமாகாணத்தில் வறுமை மிகுந்தமுதலாவது மாவட்டமாக முல்லைத்தீவும், மூன்றாவது மாவட்டமாக மன்னார் மாவட்டமும், ஐந்தாவது மாவட்டமாக கிளிநொச்சியும் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டமைஇங்கு சுட்டிக்காட்டத்தக்கது..

You might also like