வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : இன்று மட்டும் இத்தனை பேரா..? வெளியாகிய தகவல்

வவுனியாவில்

வவுனியா புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து புதிய சாலம்பைக்குளம் கிராமம் நேற்றுமுன் தினம் (12.12.2020) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் இ்ற்றையதினம் (14.12.2020) வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை , மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

முதலாவதாக அடையாளம் காணப்பட்ட புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த 28வயதுடைய தாயும் அவரது 5வயதுடைய மகளும் தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட 38 வயதுடைய தந்தை , 8 வயதுடைய மகன் , 2 வயதுடைய சிறுமி ஆகியோரை தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய சாளம்பைக்குளம் கொத்தனியில் கோவிட் -19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு இன்றையதினம் கோவிட் -19 உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like