வவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள்

வவுனியாவில் இன்றைய தினம் மாலை மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா திருநாவற்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கற்குளி பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வவுனியாவில் CCTMS பாடசாலை,

காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.

வவுனியா சுகாதார பணிமனை அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலைகள் இவ்வாறு மூடப்படுகின்றன.

You might also like