வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் நிரந்தர வீட்டிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு
வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் இன்று (12) காலை 9.30மணியளவில் அப்பகுதியில் நீண்டகாலமாக தற்காலிக வீடுகளில் வசித்துவரும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு கிராமசேவையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராசா, ஸ்ரீரெலோ கட்சியில் செயலாளர் நாயகம் ப. உதயராசா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர் திருமதி. டீ. குறூஸ், ஸ்ரீரெலோ கட்சியில் இளைஞர் அணித்தலைவர் திரு. ப. கார்த்திக், கிராமசேவையாளர் திருமதி. த. தர்சிகா, அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொணடனர்.
பழைய கற்பகபுரம்,78 வீடுகளும் புதிய கற்பகபுரம் 269 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன. இப்பபகுதிளில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் பங்களிப்புடன் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.