சற்று முன் வவுனியா கற்பகபுரத்தில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : போட்டி போட்டு ஓடியதாக மக்கள் குற்றச்சாட்டு

சற்று முன் வவுனியா கற்பகபுரத்தில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : போட்டி போட்டு ஓடியதாக மக்கள் குற்றச்சாட்டு

வவுனியா – மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (19.12.2020) மதியம் 12.00 மணியளவில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை

மன்னார் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் , இ.போ.ச பேரூந்துகள் ஒன்றின் பின் ஒன்றாக பயணத்தினை தொடர்ந்துள்ளது. இதன் போது பறயனானங்குளம் பகுதியினை அண்மித்த சமயத்தில் இரு பேரூந்துகளும் ஒன்றையோன்று சந்திந்துள்ளது.

இதனையடுத்து குறித்த தனியார் பேரூந்தினை இ.போ.ச பேரூந்து முந்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் தனியார் பேரூந்து வழி விடாது போட்டி போட்டு ஓடியுள்ளது. இவ்வாறாக 20 கிலோமிற்றர் தூரம் போட்டி போட்டு ஒடி வந்த இரு பேரூந்துகளும் வவுனியா கற்பகபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இ.போ.ச பேரூந்து தனியார் பேரூந்தினை முந்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் தனியார் பேரூந்தின் சாரதி பேரூந்தினை வீதிக்கு ஏற்றியுள்ளார். இதனால் இ.போ.ச பேரூந்து தனியார் பேரூந்துடன் மோதுண்டதுடன் பின்னர் இ.போ.ச பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகே காணப்பட்ட மின்கப்பத்துடன் மோதுண்டு வகையின் சென்றுள்ளது.

எனினும் இ.போ.ச பேரூந்தின் சாரதியின் முயற்சியினால் பேரூந்து கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இடம்பெறவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இவ் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like