இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிரங்க இவ் விமானங்களுக்கு தடையாம்

இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிரங்க இவ் விமானங்களுக்கு தடையாம்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் சகல விமானங்களையும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், நாளை அதிகாலை 2 மணி முதல் இந்த தடை அமுலுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விமான பயணங்களை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் தினம் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக உலகில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு நேற்று முதல் தடைவிதித்துள்ளன.

You might also like