சற்று முன் வவுனியாவில் மரத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்து : தூக்கி விசப்பட்ட இளைஞன்

வவுனியாவில்

வவுனியாவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கில் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் மோட்டார் சைக்கிலுடன் சாரதி 50 மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூங்கா வீதியில் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு அருகாமையில் இன்று (24.12.2020) மதியம் 2.15 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நூலக வீதியுடாக புகையிரத நிலைய வீதி நோக்கி பயணித்த உயர் விலையுடைய மோட்டார் சைக்கில் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு அருகாமையில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியில் அருகேயிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் மரத்தடியிலிருந்து சுமார் 50 மீற்றர் தூரம் வரை மோட்டார் சைக்கிலும் அதன் சாரதியும் தூக்கி விசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிலின் சாரதியான 23வயது மதிக்கத்தக்க இளைஞன் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like