முல்லைத்தீவில் அதிகாரிகளின் துணையுடன் வெட்டப்படும் மரங்கள் : மக்கள் விசனம்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த மரங்கள் அதிகாரிகளின் துணையுடன் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு சிறாட்டிகுளம், மூப்பன்குளம், கொம்புவைத்தகுளம், நட்டாங்கண்டல் ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் மிகவும் பெறுமதி வாய்ந்த தேக்கு, பாலை, முதிரை போன்ற மரங்கள் பகல் வேளைகளில் வெட்டப்பட்டு தினமும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

குறிப்பாக இதனைத் தடுக்க வேண்டிய வனவள திணைக்களத்தின் அதிகாரிகள் பொலிஸார் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகளின் துணையுடன் இவை எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தமது தேவைகளுக்கு காணிகளில் உள்ள மரங்களை வெட்டமுடியாத அளவிற்கு இறுக்கமான நடைமுறைகள் காணப்படுகின்ற நிலையில், எவ்வாறு இந்த மரங்கள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன எனவும் இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை இதனைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளின் உரிய பாதுகாப்புக்களுடனேயே வெளியிடங்களுக்கு மரங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like