சற்று முன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : மூடப்படவுள்ள வைத்தியசாலையின் சில பகுதிகள்

சற்று முன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : மூடப்படவுள்ள வைத்தியசாலையின் சில பகுதிகள்

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுடன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் முடிவு இன்று (25.12.2020) மாலை வெளியாகிய நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் சிகிச்சை பெற்ற பகுதி மற்றும் சிகிச்சையளித்த வைத்தியர்கள், தாதியர்களை தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

You might also like