காதல் விவகாரம் : இலங்கையை சேர்ந்த 16 வயது இளைஞர் ஒருவர் இத்தாலியில் மரணம்

இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இத்தாலியில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த இளைஞர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர் கல்வி பயின்று வரும் 16 வயதான குறித்த இளைஞர், இத்தாலி பெண் ஒருவரை காதலித்துள்ளார்.

காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோர்களுக்கு தெரியவர, கலாச்சாரத்தை காரணம் காட்டி காதலுக்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த குறித்த இளைஞர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மணிநேரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like