கிளிநொச்சி சம்புக்குளத்தில் பனை மரத்தில் பாம்பு தீண்டிய நபர் வைத்தியசாலையில்

கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் சீவல் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழமை போன்று தனது தொழில் நிமிர்த்தம் பனை மரத்தில் ஏறிய போது பனை வட்டுக்குள் வைத்து கைவிரலில் பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து, அயலவர்களால் பாம்புக்கடிக்கு இலக்கான குறித்த நபர் கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். .

கல்மடுநகர், சம்புக்குளத்தைச் சேர்ந்த எஸ். இந்திரச்சித்தன் (வயது 37) என்பவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

You might also like