3 வருடங்களின் பின் வெள்ளாங்குளம் வைத்தியசாலைக்கு கிடைத்த நோயாளர் காவு வண்டி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களாக இந்த வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி இல்லாமையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த இந்தப் பிரச்சினையை கவனத்தில் எடுத்த வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன், வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியை வழங்கியுள்ளார்.

இந்த பிரதேச வைத்தியசாலைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டி பல்வேறு காரணங்களினால் வேறு வைத்தியசாலைகளில் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதனால் அப்பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த நிலையில் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்த கிராம மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதன் பயனாக நோயாளர் காவு வண்டி வழங்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நோயாளர் காவு வண்டி இல்லாத நிலையில் காணப்பட்ட பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு, வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் பாவிக்கப்பட்ட நோயாளர் காவு வண்டி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

நோயாளர் காவு வண்டியை பெற்றுக்கொடுத்தமைக்காக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

You might also like