வவுனியாவில் கிணற்றில் இருந்து குடும்ப பெண் சடலமாக மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டு கிணற்றில் இருந்து குடும்ப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கூமாங்குளம், வள்ளுவர் கோட்டம் பகுதியியைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் நேற்று (12.04.2017) மதியம் 12.45 மணி முதல் காணாமல் போயிருந்தார். இவரை அவரது உறினர்கள் தேடிய நிலையில் இரவு 7.30 மணியளவில் வீட்டு வளவில் உள்ள கிணற்றில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான சிறிகாந்தன் புஸ்பலதா (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

You might also like