சற்று முன் வெளிவந்த தகவல் வவுனியாவில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று

வவுனியா வடக்கு நெடுங்கேணி

வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள் ஆசிரியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒர் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒர் ஆசிரியரின் பி.சி.ஆர் முடிவு சந்தேகத்தின் அடிப்படையில் மீள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் என 276 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் சில முடிவுகள் இன்று (11.01) காலை வெளியாகிய நிலையில் நெடுங்கேனி பகுதியினை சேர்ந்த ஒர் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் மேலும் ஒர் ஆசிரியரின் பி.சி.ஆர் முடிவு சந்தேகத்திற்கிடமான முறையில் உள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் பட்டானிச்சூர் பகுதியில் 13 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 54 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 2 நபர்களும் புளியங்குளத்தில் 1 வர் என 70 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

You might also like